கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ளதாக பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்றதாக புகார் எழுந்தது. 108 பேர் மீது வழக்குப் பதிவான நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி பெயரும் இதில் இடம்பெற்றது. அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்ப்டடது.
இந்த வழக்கில் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு கடந்த ஜனவரியில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து பாலகிருஷ்ண ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தற்போது ஒசூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். ஓசூர் தொகுதி உள்பட தற்போது தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ளன.