அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் திணறும் மருத்துவமனைகள்

 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம் அலையில் சிக்கியவர்கள் உயிர் பிழைப்பது என்பது பெரிதும் அரிதாகிவிட்டது. தினமும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. புதிதாக வரும் நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கைகளுக்காக ஆம்புலன்சிலேயே காத்துக்கிடக்கும் நிலை பெருகிவிட்டது. நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், சிறிய மருத்துவமனைகள் திக்குமுக்காடி வருகின்றன. சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் கூடிய படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் என அனைத்தும் நிரம்பி வழிகின்றன. சென்னையில் மொத்தம் 2 ஆயிரத்து 132 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் இருக்கும் நிலையில், தற்போது அவற்றில் 11 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 ஆயிரத்து 249 ஆக்சிஜன் படுக்கைகளில் 35 ஆயிரத்து 245 ஆக்சிஜன் படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில், 20 ஆயிரத்து 348 ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளிலும், 8 ஆயிரத்து 465 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளிலும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version