கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி மக்களிடையே உரையாற்றிய அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், படுக்கைகளுக்கான கள்ள சந்தையை தடுப்பதற்காக செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியதாகவும், அதன் மூலம், அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்கும் படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் குறித்து வெளிப்படை தன்மையுடன் இருக்க திட்டமிட்டதாக கூறியுள்ளார். ஆனால், தற்போது சில தனியார் மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிப்பதாகவும், நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், மற்ற அரசியல் கட்சிகளின் செல்வாக்கை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் விவரங்களை மறைப்பதாக புகார் வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வாறு செயல்படும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்காது என்று எச்சரித்துள்ள கெஜ்ரிவால், இந்தியாவிலே அதிகமாக கொரோனா சோதனை டெல்லியில் தான் நடத்தப்படுவதாகவும், அதனை உணர்ந்து மருத்துவமனைகள் செயல்படவும் அறிவுறுத்தியுள்ளார்.