மழைவேண்டி ஒமருடைய அய்யனார் கோவிலில் குதிரைஎடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அய்யனார் திருக்கோயில் குதிரை எடுப்பு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

அறந்தாங்கி அருகே ஓமக்கன்வயல் கிராமத்தில் உள்ள ஒமருடைய அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் மழைவளம் வேண்டியும், மக்கள் நலன் வேண்டியும் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா சிறப்பாக நடைபெற்றது. பெண்கள் மண்னால் ஆன சிலைகளை தலையில் சுமந்தபடி வந்து, மழை வேண்டி நேர்த்திக் கடன் செலுத்தினர். 15 அடி உயர குதிரை சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊர் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Exit mobile version