மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாளையொட்டி, கரூரில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் கரூர், திருச்சி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 104 குதிரைகள் பங்கேற்றன.
3 பிரிவுகளாக நடைபெற்ற குதிரை பந்தயத்தை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கரூர் வடிவேல் நகரிலிருந்து சத்திரம் வரை நடைபெற்ற பந்தயத்தில் குதிரைகள் சீறிப் பாய்ந்தது. குதிரை வண்டிப் பந்தயத்தை ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் நின்று பார்த்து ரசித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.