விமரிசையாக நடைபெற்ற மங்கோலியர்களின் பாரம்பரிய விளையாட்டான குதிரை விரட்டல்

சீனாவில், பாரம்பரியமிக்க குதிரை விரட்டும் திருவிழா 2000 குதிரைகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது..

சீனாவின் வடக்குப் பகுதியில், மங்கோலியர்களின் பாரம்பரிய விளையாட்டான, குதிரைகள் விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் நடத்தப்படுகிறது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், ஏறக்குறைய 2000 குதிரைகள் கலந்து கொண்டன. வடிவமைக்கப்பட்ட ஓடுதளங்கள் ஏதுமின்றி, குதிரைகள் தன்னிச்சையாகவே வட்ட வடிவமாக ஓடிவந்த காட்சி பார்வையாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. டிரோன்கள் மூலம் படம் பிடிக்கப்பட்ட இந்த காட்சிகள், காண்போரின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றன.

Exit mobile version