இந்தியா, அமெரிக்கா இடையிலான கருத்து வேறுபாடுகளை சுமுகமாக தீர்க்கப்படும் என இந்திய தூதர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா பொருட்கள் மீதான சுங்க வரியை இந்தியா உயர்த்தியது, இதனையடுத்து அமெரிக்கா பொருட்களுக்கு அதிக அளவில் வரிகளை இந்தியா உயர்த்தி வருவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா வியூகங்கள் மற்றும் பங்களிப்பு மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கலா இருதரப்பு நல்லுறவை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் நிலவுவதாகவும், விரைவில் நன்மையளிக்கக் கூடிய வகையில் தீர்வு காணப்படும் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.