காஞ்சிபுரம் மாவட்டம் கருக்குப்பேட்டையில் உள்ள அண்ணாவின் இல்லத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 51 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் கருக்குப்பேட்டையில் உள்ள அண்ணாவின் இல்லத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் ஊரக தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில், மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் வாலாஜாபாத் கணேசன், கழக அமைப்பாளர்கள் சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவச் சிலைக்கும், மாவட்ட ஆட்சியர் வளாகம், காந்திரோடு போன்ற பகுதிகளில் திருவுருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தப்பட்டது.