அண்ணா நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அதிமுக சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில், ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியார் மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அண்ணாவின் கொள்கை, கோட்பாடுகளை பின்பற்றி நடப்பதாகத் தெரிவித்தார்.

Exit mobile version