ஹோண்டா CB Shine 125 BS-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் BS-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வாகனங்களை விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட இருக்கிறது. இதற்கு ஏற்றவாறு வாகன நிறுவனங்கள் BS-6 மாடல்களை களமிறக்குவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

அந்த வகையில், நாட்டின் இரண்டாவது பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹோண்டா தனது முதல் BS-6 மாடலாக Activa 125 ஸ்கூட்டரை களமிறக்கியது. இந்த ஸ்கூட்டருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்று BS-6 மாசு உமிழ்வுக்கு நிகரான எஞ்சினுடன் Shine 125CC பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில் 19 புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version