சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும் ஹோம் மேட் சாக்லேட்ஸ்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் ஹோம் மேட் சாக்லேட்ஸ் விற்பனை அதிகரித்துள்ளது.

சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கக் கூடிய திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர கூடிய ஒன்றாக ஹோம் மேட்சாக்லேட்ஸ் உள்ளது. கொடைக்கானல் பகுதிகளில் சொந்தமாக தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹோம் மேட் சாக்லேட்டில் முந்திரி, பாதாம் , பிஸ்தா, ஆல்மண்ட் போன்றவகைகள் சேர்த்து 30க்கும் மேற்பட்ட வகைகளில் தயாரிப்பதால் அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

குழந்தைகளை கவரும் வண்ணமாக லாலிபாப், ஹார்ட், பிளவர், டாய்ஸ் வடிவங்களில் தயாரிப்பதால் அதிகமாக விரும்பி வாங்கி சுவைக்கின்றனர். சர்க்கரை நோயாளிகளுக்கு என்றே தனித்துவமாக சுகர் பிரீ சாக்லேட்களும் தயாரிக்கப்படுகிறது. எந்த ஒரு ரசாயன பொருட்களும் சேர்க்காமல் தயாரிப்பதாலும், விலைகுறைவாகவும் விற்கப்படுவதால் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் இதனை வாங்கி செல்கின்றனர் .

Exit mobile version