நாகை, திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் நாகை மற்றும் திருவாருர் மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. மறுசீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version