LKG, UKG குழந்தைகளுக்கு விடுமுறை? இன்று முறையான தகவல்வெளியாகும்

கொரோனா தாக்கம் காரணமாக எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து முறையான தகவல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து முறையான தகவல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார் என கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவான தகவலை அளிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.

Exit mobile version