ஒகேனக்கல் பகுதியில் குற்ற சம்பவங்களை கண்காணிக்க கேமரா: மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம், ஒகேனக்கல் பகுதியில் குற்ற சம்பவங்களை கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிகளில் சுமார் 15 லட்சம் மதிப்பில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கண்காணிப்பு கேமராக்கள் அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், பென்னாகரம் காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். பென்னாகரம் காட்டுப்பகுதியில் சில சமூக விரோதிகள் சென்று தஞ்சம் அடைவது தவிர்க்கவே இது போன்ற அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றன. இதனிடையே, ஒகேனக்கல் அருகே நாடார் கொட்டாய் பகுதியில் காவல்துறையினர் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version