ஒடிசாவில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா, பெல்ஜியம் இடையேயான ஆட்டம் சமனில் முடிவடைந்தது. புவனேஸ்வரில் நடைபெற்ற சி பிரிவு ஆட்டத்தின் 8 வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் ஹென்ட்ரிக்ஸ் ஒரு கோல் அடித்து அந்த அணியை முன்னிலை பெறச் செய்தார்.
முதல் பாதி முடிந்த நிலையில், இந்திய அணி எந்த கோலும் அடிக்காமல் பின்தங்கி இருந்தது. இரண்டாவது பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத், 40 வது நிமிடத்தில் கோல் அடித்து, ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.
தொடர்ந்து, 47 வது நிமிடத்தில், சிம்ரன்ஜீத் அடித்த கோலால், இந்திய அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனாலும், சுதாரித்து ஆடிய பெல்ஜியம் அணியின் கோக்நார்ட் 56 வது நிமிடத்தில் கோல் அடித்து, ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.
இதன் பின்னர், ஆட்ட நேரம் முடியும் வரை, எந்த அணியும் கோல் அடிக்காததால், 2 க்கு 2 என்ற கோல் கணக்கில், ஆட்டம் சமனில் முடிவடைந்தது.