சமீப காலமாக பேசுபொருளாகியுள்ள கந்த சஷ்டி கவசம் எப்போது, யாரால், எதற்காக எழதப்பட்டது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தேவராய சுவாமிகள் என்பவர் தீவிரமுருக பக்தர் ஆவார். இவர் ஒருமுறை பழநி முருகனை காணச் சென்றபோது, அங்கிருந்த மண்டபத்தில் உடல் மற்றும் மன நலக் குறைவால் பாதிக்கபட்டு ஏராளமானோர் முருகனின் அருளால் குணமடைய வேண்டுதல்களோடு காத்திருப்பதை அவர் பார்த்துள்ளார். இவர்களை கண்ட தேவராய சுவாமிகள் பழநி முருகனுக்கு முன்பாக நின்று பிணியால் வாடுபவர்களுக்கு, அவர்களின் குறைபாடுகள் போக்க, உடம்பின் ஒவ்வொரு உறுப்புகளுக்காகவும் வேண்டுகிறார். அதனடிப்படையில் எந்த குறையும் இல்லாத மானுடர்களுக்காக அவர் பாடவில்லை என்பதை உணரலாம். மனிதர்களின் பிணியை முருகனின் வேல் காக்கும் என்ற நம்பிக்கையில் பாடப்பட்டதே கந்தசஷ்டி கவசம் என்பது இதன்மூலம் அறியமுடிகிறது.