வரலாற்று அநீதியை சரி செய்வதற்காகவே குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக பிரதமர் மோடி பேச்சு

வரலாற்று அநீதியை சரி செய்வதற்காகவே குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சுதந்திரம் அடைந்ததில் இருந்தே ஜம்மு-காஷ்மீரில் பிரச்னைகள் நிலவி வந்ததாகவும், சில அரசியல் கட்சிகள் அங்கு தீவிரவாதத்தை தூண்டிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். எனினும் தற்போதைய அரசு காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளதாகவும் அவர் கூறினார். அண்டை நாடான பாகிஸ்தான் ஏற்கனவே இந்தியாவுடன் 3 முறை போரிட்டு தோல்வி அடைந்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, மீண்டும் இந்தியாவுடன் பாகிஸ்தான் போர் தொடுக்க முயற்சிப்பதாக விமர்சித்தார். குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை சில அரசியல் கட்சிகள், வாக்கு வங்கி அரசியலுக்காக பயன்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மட்டுமில்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலவிய பிரச்னைகளுக்கும், மத்திய அரசு தீர்வு கண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version