அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்திற்கு உரிமை கோரி ராம்லல்லா, நிர்மோகி அகரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று அமைப்புகளும்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில் 40 நாட்கள் தொடர் விசாரணை நடத்தி வந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது.சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், இஸ்லாமிய அமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடாக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

அயோத்தி வழக்கு: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

 

Exit mobile version