இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்

சிவகங்கை அருகே இந்து-இஸ்லாமியர் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக, கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் 200-க்கும் மேற்பட்ட பானைகளில் அப்பகுதி பெண்கள் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள ராம்நகர் பகுதியில் வசிக்கும் இந்து – இஸ்லாமியர் பெண்கள் ஒன்றிணைந்து, சமுத்துவ பொங்கல் வைத்தனர். இந்நிகழ்வில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, 200-க்கும் மேற்பட்டோர் பாரம்பரிய உடை அணிந்து கலந்துகொண்டனர். இதன்பின் நடந்த கயிறு இழுத்தல், பானை உடைத்தல் போன்ற போட்டிகளில் அப்பகுதிகளைச்சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் பங்கெடுத்தனர். பின்னர் இப்போட்டிகளில் வென்றவர்களுக்கு ஏ.எஸ்.பி கிருஷ்ணராஜ் பரிசுகளை வழங்கினார்

Exit mobile version