காதலர் தினத்திற்கு இந்து பாரத் சேனா எதிர்ப்பு

காதலர் தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்து பாரத் சேனா அமைப்பினர் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து எறிந்தனர்.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து பாரத் சேனா அமைப்பினர்,  நம் நாட்டின் பண்பும் கலாச்சாரமும் எந்த அளவிலும் பாதிக்காமல் சிறந்த பண்புகளைப் பேணி காக்கும் இளைஞர் சமுதாயத்தை வளர்க்க வேண்டுமெனவும், உண்மை காதலர்கள் வெட்கி தலைகுனியும் நிலை மாறி நல்ஒழுக்கம் பேணும் வகையில் காவல்துறையினரும், பொதுமக்களும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.

Exit mobile version