உத்தரகாண்ட் மாநிலத்தில் மலை போல் தேங்கிய குப்பை: பொது மக்கள் கடும் அவதி

உத்தரகாண்ட் மாநிலத்தின் அவ்லி நகராட்சிக்கு உட்பட்டப் பகுதியில் தென்னாப்ரிக்காவில் வசிக்கும் பணக்காரர்களான குப்தா குடும்பத்தின் திருமணம் கடந்த 18 முதல் 20ஆம் தேதி வரை நடந்தது. இந்த திருமணம் நடைப்பெற்ற இடத்தில் குப்பைகள் அகற்றப்படாததால் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சுமார் 200 கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் பல மாநில முதல்வர்கள், இந்தி திரையுலக பிரபலங்கள், யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியில் ராம்தேவ் 2 மணி நேர யோகா நிகழ்ச்சி நடத்தினார். சிறப்பு அழைப்பாளர்களை திருமணம் நடக்கும் இடத்துக்குக் கொண்டு வர ஹெலிகாப்ட்டர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. அனைத்து உணவகங்கள் மற்றும் விடுதிகளில் இருந்த அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. திருமணத்தையொட்டி ஸ்விட்சர்லாந்திலிருந்து மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இப்படி ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தின் முடிவு பொது மக்களுக்கு சோதனையை தந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பல, தற்போது குப்பைகளாக அந்த இடத்திலேயே இருக்கின்றன. திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்ட இலைகள் அந்த பகுதியில் மலை போல் குவிந்துள்ளது. அந்த குப்பைகளை அகற்ற 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதுவரை மட்டுமே அங்கிருந்து 40 குவின்டால் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Exit mobile version