ஈரோட்டில் விபத்துக்களை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையின் நடுவே மையத்திட்டு கற்கள் வைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை நடுவே மையத்திட்டு கற்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் சாலையில், சத்தியமங்கலம், ஊட்டி, மேட்டுப்பாளையம், மைசூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இதனால் விடுமுறை நாட்களை தவிர்த்து வேலை நாட்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகின்றது. மேலும் நகரின் மையப்பகுதிகளில் சாலையை கடக்கும்பொழுது விபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே விபத்துகளை தடுக்க தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட இந்த மையத்திட்டு கற்களுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.