உல்லாச உலகம் பகுதியில் இன்று அதிசய ஜெல்லி மீன் ஏரியின் அழகையும், அதிசயத்தையும் கண்டுரசிக்கலாம்.. இப்படி ஒரு ஏரி உலகில் வேறெங்கும் இருக்குமா என தெரியவில்லை…
மிக அழகாக காணப்படும் இது தான் ஜெல்லி மீன் ஏரி… இது உலகின் மிக அரிதான கடல் ஏரியாகும்…
இந்தோனேஷியா அருகே உள்ள பலாவு என்ற தீவு நாட்டில் இந்த ஏரி உள்ளது..
Eil Malk பகுதியில், சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டு, நடுவில் இருக்கும் இருக்கிறது.. இந்த ஏரிக்குள் அதிக எண்ணிக்கையில் ஜெல்லி மீன்கள் உலா வருவதால் இந்த ஏரிக்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.. தங்க நிற ஜெல்லி மீன்கள், நிலவை போல இருக்கும் சந்திர ஜல்லி மீன்கள் உள்ளிட்டவை ஏரியை ஆக்கிரமித்துள்ளன.
இதை போலவே இங்கே ஏராளமான உப்புநீர் ஏரிகள் நிறைந்து காணப்படுகின்றன. மலைகளுக்குள் இருக்கும் பிளவுகள் மூலம் கடல்நீர் ஏரிக்குள் புகுகிறது. கடலுடன் இணைந்திருந்தாலும் கடலில் இருக்கும் உயிரினங்கள் இந்த ஏரிக்குள் பெரிதாக புக முடிவதில்லை… ஆகவே இந்த ஏரிக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த ஜெல்லி மீன்களும் இன்ன பிற உயிரினங்களும் இங்கே நிறைந்துள்ளன.. இந்த ஏரி உருவாகி 12 ஆயிரம் ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜல்லி மீன்கள் ஆபத்தானவை.. விஷக்கொடுக்குகள் மூலம் மனிதர்களை கொட்டிவிடும்.. ஆண்டுக்கு 40 பேர் வரை ஜெல்லி மீன் கடித்து இறப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கிறது.. இருந்தாலும் பாதுகாப்புடன், இந்த ஏரிக்குள் ஆக்ஸிஜனுடன் மூழ்கி, ஜெல்லி மீன்களை கண்டுரசிக்க ஏராளமானோர் விருப்பப்படுவர்..
ஜெல்லி மீன் ஏரி பகுதிக்கு செல்ல 100 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக விதிக்கப்படுகிறது.. இந்த பணத்தை கொடுத்து பாஸ் வாங்கிக்கொள்ள வேண்டும்.. அந்த பாஸை வைத்து, 10 நாட்கள் வரை இந்த ஜெல்லி மீன் ஏரிப்பகுதியில் சுற்றிப்பார்க்கலாம்..
மனிதர்களின் செயல்பாடுகளால் அங்குள்ள ஜெல்லி மீன்கள் அதிக எண்ணிக்கையில் இறந்ததால், அங்கே செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.. அங்கே செல்லலாம்.. சுற்றிப்பார்க்கலாம்.. ஜெல்லி மீன்களை கண்டு ரசிக்கலாம்.. ஆனால் ஸ்கூபா டைவிங் செய்ய முடியாது.. ஏனெனில் ஸ்கூபா டைவிங் செய்வோரிடம் இருந்து வெளியாகும் காற்றை சுவாசிக்கும் ஜெல்லி மீன்கள் இறந்துவிடுகிறதாம்.. இதனால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சராசரியாக ஜெல்லி மீன்கள் ஒரு ஆண்டுகள் தான் வாழ்கின்றனவாம்..
சுறா, பாம்புகள் கடித்து இறப்பதை விட இந்த ஜெல்லி மீன்கள் கடித்தால் உயிருக்கு அதிக ஆபத்து நேரிடுகிறதாம்.. 43 வகையான ஜெல்லி மீன்கள் விஷத்தன்மை வாய்ந்தவை.,. அதே நேரத்தில் விஷமற்ற ஜெல்லி மீன் வகைகளும் உள்ளன.. மனிதர்கள் சாப்பிட ஏற்றதாகவும் சில வகை ஜெல்லி மீன்கள் உள்ளன.. கிழக்காசிய நாடுகளில் உண்ணத்தக்க ஜெல்லி மீன்களும் சந்தைகளில் விற்கப்படுகிறது. ஜெல்லி மீன்களை ஆமைகள், சூரிய மீன்கள் உள்ளிட்டவை வேட்டையாடி உண்கின்றன..
அது என்ன சூரிய மீன் என்கிறீர்களா.. இது தான்.. பார்க்க சூரியன் போலவே இருப்பதால் இம்மீன்களுக்கு சூரிய மீன்கள் என பெயர்.. இவை 250 முதல் 1000 கிலோ எடை வரை வளரும் தன்மை கொண்டவையாகும்.. மற்ற மீன்களை விட இவை அதிக எண்ணிக்கையில் முட்டையிடுகின்றன.. அதாவது ஒரே நேரத்தில் 30 கோடி முட்டைகள் வரை இடும் .. இந்த மீன்களும் பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் விரும்பி உண்ணப்படுகின்றன..