உதகையில் நடைபெறும் உயர்கல்வி மாநாட்டை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில், இந்திய மேலாண்மை நிறுவனம் சார்பில் நடைபெற்ற “வேந்தரின் இலக்கு 2030” என்னும் உயர்கல்வி மாநாடு தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய ஆளுநர், வறுமையையும் ஏற்றத்தாழ்வையும் குறைப்பதற்கான சக்திவாய்ந்த கருவி கல்வி என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய மேலாண்மை நிறுவன இயக்குநர் பீமராய மேத்ரி, 20 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.