திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் குறைவான தண்ணீரில் கத்திரிக்காய் பயிரிட்டு அதிக மகசூல் பெற்றுள்ள விவசாயி அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார்.செங்கம் செய்யாற்றங்கரையில் கரீம்பாய் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கத்திரிக்காய் சாகுபடி செய்துள்ளார். குறைவான தண்ணீரை பயன்படுத்தி கத்திரிக்காய் பயிரிட்டு அதிக மகசூல் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆயினும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கிலோ 35 ரூபாய் வரை விலைபோன கத்திரிக்காய், தற்பொழுது விலை குறைந்து கிலோவிற்கு 8 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆவதால் கவலை கொண்டுள்ளார். இந்நிலையில் வறட்சி நிவாரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ள நிதியுதவிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.