கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாங்கனிகள் நேரடி விற்பனைக்கும், தொழிற்சாலைகளுக்கு சாறு தயாரிக்கவும் அனுப்பபடுகிறது. நடப்பாண்டு பெய்த அதிக மழையால் மா மரங்களில் பூக்களுக்கு பதில் இலைகள் துளிர் விடுவதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதேபோல் தொழிற்சாலைகள், பழச்சாறுக்காக ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்யும் மாம்பழங்களுக்கு நிர்ணயிக்கும் விலையை விட, இங்கிருந்து கொள்முதல் செய்யும் மாம்பழங்களுக்கு குறைந்த விலையே நிர்ணயிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, தமிழக ஆரசு மாங்கனிகளுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Discussion about this post