கொடைக்கானலில் சீசன் துவங்கவுள்ள நிலையில், தங்கும் விடுதிகளில் அதிக வாடகை வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது. ஆனால் இங்கு வந்த சுற்றுலாப்பயணிகள் பெருமளவில் தங்கும் விடுதிகள் இல்லாததாலும், இங்குள்ள ஒரு சில தங்கும் விடுதிகளில் வாடகையை இருமடங்காக ஏற்றி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் பெறும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கொடைக்கானலில் இரண்டு , மூன்று நாட்கள் தங்கி சுற்றிப்பார்த்து செல்லக்கூடிய சுற்றுலாப்பயணிகள் ஒரே நாளில் தங்களது சொந்த ஊருக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.