தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்திக் கொடுக்க கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில், பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் வசதிக்காக தனித்தனியாக வரிசைகள் அமைக்கப்பட்டுள்ள போதும், மாற்றுத்திறனாளிகளுக்காக தனி வரிசை இல்லை எனக்கூறி சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,இதுகுறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்க, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்,உள்ளிட்டோர் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.