கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ன? – பிசிசிஐ க்கு உயர்நீதிமன்றம் கேள்வி?

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, வரும் 29-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சைகர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஐ.பி.எல் போட்டிகளை காண ரசிகர்கள் அதிகம் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் போட்டிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார். பிசிசிஐ தரப்பில், போட்டிகளை காண வரும் ரசிகர்களை தெர்மல் ஸ்கேனரை கொண்டு சோதனை செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஐ.பி.எல் போட்டிகளின் போது மேற்கொள்ளப்பட இருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பிசிசிஐ-க்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

Exit mobile version