ஹைகோர்ட் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி ஹைகோர்ட் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது

சண்முக நதியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிபட்டனர். இந்த திருவிழாவில், சுற்றுவட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்காக உள்ளூர் காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Exit mobile version