18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் வரும் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதில்லை என 18 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆதிகேசவுலு மற்றும் சசீதரன் அமர்வு, வரும் 22ஆம் தேதிக்குள் இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.