பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி கடந்த பிப்ரவரி மாதம் அரசுக்கு நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து தங்களை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென்ற நளினியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.