உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்ட வழக்கில் உரிய பதிலளிக்குமாறு விகடன் குழுமத்திற்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து அமைச்சர் குறித்து அவதூறு செய்திகளை வெளியிடவும் தடை விதித்துள்ளது.
அமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சென்ற ஆண்டின் பிப்ரவரி மற்றும் மே மாத இதழ்களில் இந்த அவதூறு செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார்.எனினும் விகடன் மன்னிப்பு கேட்காததைத் தொடர்ந்து 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் உரிய பதிலளிக்குமாறு விகடன் குழுமத்திற்கு உத்தரவிட்டதுடன் அமைச்சர் மீது எந்தவித அவதூறு செய்தி வெளியிடவும் தடை விதித்துள்ளது.