800 ரூபாய்க்கு விற்பனையாகும் கருங்கோழி!

கொரானோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நாட்டுக்கோழி மற்றும் கருங்கோழியின் விற்பனை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. பிராய்லர் கோழியால் கொரோனா பரவுவதாக வந்த வதந்தியால் கறிக்கோழி விலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த பிராய்லர் கோழிக்கறி, தற்போது 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒருபுறம் பிராய்லர் கோழிக்கறி விற்பனை சரிவடைந்துள்ள நிலையில், மறுபுறம் நாட்டுக்கோழி மற்றும் கருங்கோழியின் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதனால், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த மாதம் 450 ரூபாய்க்கு விற்கப்பட்ட நாட்டுகோழி, தற்போது 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கருங்கோழி, தற்போது 800 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது.

Exit mobile version