நடிகை ஸ்ருதிக்கு கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல்!

நடிகை ஸ்ருதியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி, கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலதிபர் மற்றும் அவரது மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராஜசேகரன் மற்றும் அவரது மகன் அமுதன் வெங்கடேசன் ஆகியோர் மயிலாப்பூரில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் பொம்மைகள் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நடிகர் ஸ்ருதியை, அமுதன் வெங்கடேசன் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் நடிகை ஸ்ருதியிடம் திருமணம் செய்துக் கொள்ள அமுதன் வெங்கடேசன் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு நடிகை ஸ்ருதி மற்றும் அவரது தாய் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ஸ்ருதி வெளிநாட்டிற்கு படிக்கச் சென்ற நிலையில், கடந்த 5ம் தேதி நடிகையின் தாய் சித்ராவை மடக்கிய தொழிலதிபர் ராஜசேகரன் மற்றும் அமுதன் வெங்கடேசன் ஆசிட் வீசிவிடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகையின் தாய் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் ஸ்ருதியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி, கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலதிபர் மற்றும் அவரது மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே நடிகை ஸ்ருதி திருமண மோசடியில் சிக்கியுள்ளதால், காவல்துறையினர் இவ்வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version