மூலிகை இலை இருக்கு..முகக்கவசம் எதற்கு??-பழங்குடி மக்களின் பாதுகாப்பு பாரம்பரியம்!!!!!!

கொடைக்கானலில், பழங்குடியின மக்கள் கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள, மூலிகை இலையை முகக்கவசமாக அணிந்து வருவது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள, உலகம் முழுவதும் மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளனர். அன்றாட வாழ்வில் தவிர்க்க இயலாத அத்தியாவசியமானதாக முகக்கவசம் மாறிவிட்டது.

இரண்டடுக்கு முகக்கவசம், மும்மடிப்பு முகக்கவசம், N95 என விதவிதமான முகக்கவசங்கள் சாலையோர கடைகளில் கூட விற்பனைக்கு வந்துவிட்டன.

ஆனால், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த வடகரைபாறையில், பழங்குடியின மக்கள், பீச்சலாம் இலையை முகக்கவசமாக அணிகின்றனர். வனப்பகுதியில் கிடைக்கும் இந்த இலைகள், நறுமணமாக இருப்பதாகவும், நுரையீரலை பாதுகாப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

காய்ச்சலை போக்கவும், காயத்தை குணப்படுத்தவும் இந்த இலை பயன்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேற்கண்ட செய்தியை காட்சிப்பதிவு வடிவமைப்பில் காண கீழே உள்ள YOUTUBE-பிரிவில் உள்நுழையுங்கள்…

??⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬??

Exit mobile version