ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சரானார் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்றார்.

மொத்தமாக 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அங்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மிக அதிகமான வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக, இன்று,  ஹேமந்த் சோரன் பதவியேற்றார். அவருக்கு மாநில ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Exit mobile version