மக்கள் சுய ஒழுக்கத்தோடு ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

சட்டவிதிகள், நீதிமன்ற உத்தரவுகள், காவல்துறையின் விழிப்புணர்வு இருந்தாலும் வாகனத்தில் பயணிப்பவர்கள் சுயஒழுக்கத்தோடு ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்டை கட்டாயமாக்க கோரி சென்னை கொரட்டூர் சேர்ந்த  ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சத்திய நாரயாணன், ராஜமாணிக்கம் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் 60 சதவீதமாக அதிகரித்திருந்தாலும், பின்னால் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிவதே கிடையாது என நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
மேலும், ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்ட விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், ஹெல்மெட் அணியாமல் வந்து 100 ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டு, மீண்டும் ஹெல்மெட் அணியாமல் செல்வதாக அரசு தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. உத்தரவுகளை மதிக்காமல் , சாதாரணமாக உத்தரவுகளை பிறப்பித்து என்ன பயன் என வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், மக்கள் சுயஒழுக்கத்தோடு ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து பயணிக்க முன்வர வேண்டும் என அறிவுறுத்தினர்.

 

 

 

Exit mobile version