அவலாஞ்சியில் கனமழையால் துண்டிக்கப்பட்டிருந்த போக்குவரத்து சீரானது

நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் துண்டிக்கப்பட்ட சாலைகள் போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது போக்குவரத்து சீரானது.

10 நாட்களுக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதில் நீலகிரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டன. உடைமைகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டதால், தடைபட்டிருந்த போக்குவரத்து தற்போது சீராகி உள்ளது. நேற்று முதல் அவலாஞ்சி பகுதிக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

Exit mobile version