கோதையூர் வனப்பகுதிகளில் கடும் வெயில்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கோதையூர் வனப்பகுதிகளில் கடும் வெயிலால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். குமரி மாவட்டம் கோதையூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அதிக வெயிலால் மிகவும் கஷ்டப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மோதிரமலை, மணலிக்காடு, கொடுத்துறை, மாங்கமலை, விலாமலை , முடவன் பொற்றை, உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பகுதிகளில் மலைவாழ் மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

கடந்த வருடங்களில் மார்கழி மாதம் கடும் குளிர் நிலவிய நிலையில், கால நிலை மாற்றத்தினால் தற்போது அதிகமான வெயில் வாட்டி வருவதால், மலைப்பகுதிகளில் நீரோடைகள் அனைத்தும் வறண்டு காணப்படுவதாகவும், வனவிலங்குகள் அனைத்தும் பேச்சிப்பாறை வனப்பகுதிகளுக்கு படையெடுப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அதிகமான மரங்களை வளர்க்கவேண்டுமெனவும், வரும் காலங்களில் இது மிகவும் நல்ல பயனுள்ளதாக இருக்குமெனவும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version