நீலகிரி கூடலூரில் பனிபொழிவால் தேயிலை, காபி, குறுமிளகு விளைச்சல் குறைந்து விலையும் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடும் பனி நிலவுகிறது. இதனால் குறுமிளகு விளைச்சலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மிளகு விலையும் தற்போது குறைந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கடும் பனி பொழிவால் தேயிலை செடிகள் கருகிய நிலையில் விளைச்சலில் பாதிப்பை உண்டாக்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். புயல், மழை காரணமாக காபி விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.