தேனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு

தேனியில், நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் செடிக்கொடிகள் கருக தொடங்கியுள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தேவாரம், கோம்பை பண்ணைப்புரம், ஆகிய ஊர்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. முந்திரி, மொச்சை, அவரைச்செடிகள் பனியால் கருகிய நிலையில் காட்சியளிக்கிறது. போடி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளிலும் பனிப்பொழிவானது கடுமையாக இருக்கிறது. வேப்பிலைகளும் கருகத் தொடங்கியுள்ளன. அடுத்தடுத்த மாதங்கள் கோயில் திருவிழாக்கள் நடைபெறும் என்பதால், தோரணங்கள் கட்டக்கூட வேப்பிலைகள் இருக்காது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version