இன்று தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் சில இடங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

தென் மேற்கு பருவமழை வட மாநிலங்களில் தீவிரமாக உள்ளதால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழகத்தில், வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, மூன்று நாட்களாக வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனையடுத்து வானிலை ஆய்வு மையம் நேற்று 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று சில இடங்களில் மட்டும் கனமழை பெய்யும் எனவும் மற்ற இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில், இரவில் பரவலாக மழை பெய்தது.

Exit mobile version