கோடை காலம் துவங்குவதற்கு முன்பாகவே வேலூர் மாவட்டத்தில் அனல் காற்று விசுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கோடை காலத்தில் மற்ற மாவட்டங்களை விட வேலூரில் கடுமையான வெயில் பதிவாவது வழக்கம். ஆனால், தற்போது பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்ட துவங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக வெயில் 100 டிகிரியை தாண்டி காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர். பகல் நேரத்தில் மக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் இரவு நேரங்களிலும் வீடுகளில் அனல் காற்று வீசுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இன்று அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.