கேரளாவில் உள்ள கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தன. குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் பெரிய அளவில் சேதத்தை சந்தித்தன. மழை சற்று ஓய்ந்த நிலையில், கேரளாவில் உள்ள 10 மாவட்டங்களில் மீண்டும் கனமழை பொழியும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.