உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 14 மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு பிகார், உத்தர பிரதேச, உத்தரகாண்ட் உட்பட 14 மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசை நோக்கி மத்திய பிரதேச அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா பொறுத்த வரை மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.