தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் கனமழைக்கு 83 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 13ஆம் தேதி முதல் பெய்து வரும் கனமழையால் ஹைதராபாத் உள்பட 15க்கும் மேற்பட்ட பகுதிகளில் வீடுகள் வெள்ளநீரில் மூழ்கின. கனமழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 50 பேர் உயிரிழந்த நிலையில், 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல, கர்நாடகா மாநிலத்தின் பீதர், கலபுரகி, ராய்ச்சூர், பாகல்கோட்டை, பல்லாரி, மாதகிரி உள்ளிட்ட வடகர்நாடக பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

மகாராஷ்டிராவில் புனே, லோலாப்பூர், கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மூன்று மாவட்டங்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கனமழைக்கு தெலங்கானாவில் 50 பேரும், மகாராஷ்டிராவில் 27 பேரும், கர்நாடகாவில் 6 பேரும் உயிரிழந்தனர். இதற்கிடையே, மகாராஷ்டிராவின் லோப்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய நபரை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்கும் காட்சி வெளியாகி உள்ளது.

Exit mobile version