தமிழகத்தில் வேலூர், காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.எஸ்.வி.சத்திரம், ஒரகடம், படப்பை, மணிமங்கலம்,சோமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளான மணவாளநகர், வெங்கத்தூர், அரண்வாயல் பெரியகுப்பம், பூங்காநகர் உள்ளிட்ட இடங்களில், சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காட்டப்பட்ட நிலையில், திடீரென மழை பெய்தது. சுமார்30 நிமிடங்களாக பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.