தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வந்தவாசி சுற்றியுள்ள காரம், கொசப்பட்டு, கீழ்குவளைவேடு, வெண்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. பாசனத்திற்கு தேவையான தண்ணீர் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று கீழ்பென்னாத்தூர், மங்கலம் பகுதியில் இரவு முழுவதும் பெய்த மழையால் சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர், ஏரி, குளங்களில் நிரம்பி வருகிறது. கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. கனமழை காரணமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. தொடர் மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளான பூதலூர், செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இரவு இடியுடன் கனமழை பெய்தது.இரண்டு மணி நேரமாக பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்க உள்ள நிலையில், மழை பெய்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Exit mobile version