திருவள்ளூர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையினால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 137 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றாக உள்ளது, பூண்டி ஏரி. இதன் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடியாகும். நிகழாண்டில் போதிய பருவமழை பெய்யாததால் ஏரி நீரின் கொள்ளவு குறைந்தது. இந்நிலையில், புதன் கிழமை, விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக ஏரி மொத்த நீரின் கொள்ளளவு 15 மில்லியன் கன அடியிலிருந்து 137 மில்லியன் கன அடியாக அதிகரித்ததுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருவள்ளூரில் மட்டும் 22 செண்டி மீட்டர் மழை பதிவாகியது குறிப்பிடத்தக்கது.